இந்தியா வளரும் நாடு. கிட்டதட்ட 565 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து கட்டியமைக்கப்பட்ட நாடு. வறுமை, ஜாதி, மதம், மொழி, நில அரசியலைத் தாண்டி நாம் நம்மை முன்னேற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு வளரும் நாடு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், அதில் அடையும் தோல்விகளைப் பற்றி பேச பலர் இருக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, நாம் நம் இலக்கை நோக்கி பயணிக்க இதுவரை நாம் கடந்துவந்த பாதையையும், அடைந்த வெற்றியையும் எண்ணிப் பார்த்தால் மட்டுமே முன் நோக்கி நகர முடியும். அதை பதிவு செய்ய வேண்டியது என் கடமை என நம்புகிறேன்.